செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா IndiGo விமான சேவைகளை ரத்து செய்யப்பட்டமையால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு!

IndiGo விமான சேவைகளை ரத்து செய்யப்பட்டமையால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு!

0 minutes read

IndiGo விமான நிறுவனம் இதுவரை காணாத அளவு விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையிலிருந்து (1 டிசெம்பர்) நிறுவனத்தின் சேவைகளில் பெரிய அளவில் தடங்கல் ஏற்பட்டது. பல்லாயிரம் பேரின் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலர் பயணப் பெட்டிகளுடன் விமான நிலையங்களில் முடங்கிக்கிடப்பதை காண முடிகிறது. தாங்கள் படும் அவதியைப் பயணிகளில் பலர் வீடியோக்களாகவும் படங்களாகவும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இதேவேளை, இண்டிகோ விமானச் சேவைகள் மிக விரைவில் சரிசெய்யப்படும் என்று இந்தியாவின் சிவில் விமானத்துறை அமைச்சு உறுதி கூறியிருக்கிறது.

அத்துடன், அமைச்சு இந்த நெருக்கடி குறித்து விசாரணை நடத்தவிருப்பதாகத் கூறியது. இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாக நடைமுறைகளை அது குறைகூறியது.

IndiGo நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. IndiGo விமான நிறுவனத்தின் Facebook பக்கத்தில் “We are sorry” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More