செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மணிப்பூரில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு

மணிப்பூரில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு

0 minutes read

மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்றுள்ளார். அவருக்கு மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த புதிய நிர்வாக அமைப்பில், குகி சமூகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

மேலும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் மற்றும் என்.பி.பி கட்சியைச் சேர்ந்த கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.