செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் 5 நாள் உலக செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு – பிரதமர் தொடங்கி வைத்தார்

இந்தியாவில் 5 நாள் உலக செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு – பிரதமர் தொடங்கி வைத்தார்

1 minutes read

இந்தியாவில் முதல்முறையாக ஐந்து நாள் உலக செயற்கை நுண்ணறிவு (AI) உச்சநிலை மாநாடு, இன்று (16) தொடங்கியது. “AI Impact Summit” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில் இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், சுவிட்சர்லந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படும் தாக்கங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரம், ஆட்சி முறைகள் மற்றும் சமூக அமைப்புகளை அடிப்படையாக மாற்றியமைக்கும் திறன் கொண்டதாக இருப்பதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில், சுந்தர் பிச்சை உட்பட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்னர் பாரிஸ், சோல் மற்றும் இலண்டன் ஆகிய நகரங்களில் இந்த மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.