ஈரான் மீது கடந்த மாதம் 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கி வைத்த தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி கொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, வளைகுடா பிராந்திய முழுவதும் நடைபெற்ற போரில் ஈரானில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அரச மற்றும் இராணுவத்தின் முக்கிய தலைவர்களும் அடக்கம்.
போர் தற்போது 3வது வாரத்தில் தீவிரமாக நடக்கிறது. இஸ்ரேல் கேஸ் வயலை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், ஈரான் பதிலடியாக கத்தார் கேஸ் வயலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களை மேற்கொண்டு போரின் வீரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவதும், ஈரான் மீது தரை தாக்குதலை நடத்துவதும் ஆகியவற்றை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் மத்திய கிழக்கில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கையும் பரிசீலனையில் உள்ளது.
ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் மீதான ராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அந்நாட்டின் மீதான இலக்குகளை விரைவில் முடிக்கப்போகிறோம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்பாத நட்பு நாடுகளையும் அவர் கண்டித்து கூறியுள்ளார்.