செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் நரேந்திர மோடி

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் நரேந்திர மோடி

0 minutes read

உலகின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களின் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Morning Consult என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம், பல்வேறு நாடுகளின் தலைவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

அதன் முடிவுகளின்படி, சுமார் 70 சதவீத மக்களின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உலகின் மிகச் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்கிறார்.

அவரைத் தொடர்ந்து, லீ ஜே-மியுங் 63 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தையும், ஆண்ட்ரே பாபிஷ் 55 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், பிரெடரிக் மெர்ஸ் தலைமையிலான ஜெர்மனி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சுமார் 76 சதவீத மக்கள் திருப்தியற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், உலகளவில் குறைந்த செல்வாக்கு கொண்ட தலைவர்களில் அவர் முன்னிலை வகிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.