செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா உளவு அமைப்புக்கு தகவல் கசிந்த்த குற்றச்சாட்டு: ஈரான் அதிகாரிக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!

உளவு அமைப்புக்கு தகவல் கசிந்த்த குற்றச்சாட்டு: ஈரான் அதிகாரிக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!

0 minutes read

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்கு (Mossad) இரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் நாட்டின் சிவில் பாதுகாப்புத் துறையில் உயர்பதவியில் இருந்த மெஹ்தி பரித் (Mehdi Farid) என்பவர், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளின் வரைபடங்கள், உள் கட்டமைப்பு விவரங்கள் மற்றும் பணியாளர்களின் முக்கிய தகவல்கள் உள்ளிட்ட நுணுக்கமான தகவல்களை இஸ்ரேலுக்கு மாற்ற முயன்றதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் செயல்கள் தேசிய பாதுகாப்புக்கு தீவிர அச்சுறுத்தலாக கருதப்பட்டதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணதண்டனை குறித்து Mizan News Agency என்ற ஈரான் நீதித்துறை ஊடகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம், பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்து வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.