செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஈரான் தொடர்புடைய 12 பேருக்கு இங்கிலாந்து கடும் தடை – சொத்து முடக்கம், பயணத் தடை அமல்

ஈரான் தொடர்புடைய 12 பேருக்கு இங்கிலாந்து கடும் தடை – சொத்து முடக்கம், பயணத் தடை அமல்

1 minutes read

இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்புக்கும் அதன் நட்பு நாடுகளின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஈரான் தொடர்புடைய 12 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது இங்கிலாந்து அரசாங்கம் கடுமையான தடைகளை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் மற்றும் அமைப்புகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இங்கிலாந்திற்கள் நுழைவதற்கும் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த நபர்களின் நிதி மற்றும் சர்வதேச நகர்வுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

ஈரான் உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதுடன், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சதித்திட்டங்களை முன்னெடுத்ததாக இங்கிலாந்து அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இங்கிலாந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி தடைகள் அமல்படுத்தப்பட்டதாக இங்கிலாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

சமீபகாலமாக மேற்கு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய தடைகள் சர்வதேச அரசியல் அரங்கில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாட்டு செல்வாக்கு நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.