செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை BREAKING News: பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு!

BREAKING News: பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு!

0 minutes read

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கொன்றில் ஆஜராகத் தவறியமைக்காக மாத்தறை பிரதான நீதிபதி சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கியது தொடர்பாக, பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவினால் மாத்தறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ஷ இன்று (22) நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டியிருந்தது.

இருப்பினும், அவர் தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என அவருடைய வழக்கறிஞர்கள் அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.

குறித்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, அவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.