செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜெர்மனி ரயில் நிலையங்களில் நடக்கும் வன்முறை புள்ளிவிவரங்களால் அதிகாரிகள் அதிர்ச்சி!

ஜெர்மனி ரயில் நிலையங்களில் நடக்கும் வன்முறை புள்ளிவிவரங்களால் அதிகாரிகள் அதிர்ச்சி!

1 minutes read

ஜெர்மனியின் ரயில் நிலையங்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஏனைய இடங்களை விட ரயில் நிலையத்தில் அதிகளவிலான வன்முறை நிகழ்வதாக குற்றவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஃபிராங்க்பர்ட் (Frankfurt) ரயில் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகள், அதன் அண்டைப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருப்பார்கள், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வெளியிலிருந்து பார்க்கும்போது பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜெர்மனியின் ரயில் நிலையங்களில் நடக்கும் வன்முறை குறித்த புள்ளிவிவரங்கள் பல அதிகாரிகளுக்குத் தலைவலியை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக கடந்த லைப்சிக் (Leipzig) மத்திய நிலையத்தில் 859 வன்முறைக் குற்றங்களும், டார்ட்மண்ட் (Dortmund) மத்திய நிலையத்தில் 735 குற்றங்களும், பெர்லின் (Dortmund) மத்திய நிலையத்தில் 654 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.