செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பஸ்ஸுக்கு முன் பெண்ணை தள்ளிவிட்ட நபர் 09 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

பஸ்ஸுக்கு முன் பெண்ணை தள்ளிவிட்ட நபர் 09 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

1 minutes read

இலண்டனில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பஸ்ஸின் முன் தள்ளியதாகக் கூறப்படும் வழக்கில், 44 வயது நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து, தற்போது பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு மே மாதம் தென்மேற்கு இலண்டனில் உள்ள புட்னி பாலத்தில் (Putney Bridge) இந்தப் பயங்கர சம்பவம் நடந்தது. பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த (jogging) நபர் ஒருவர், அப்போது 33 வயதான பெண்ணை வேண்டுமென்றே வீதியின் குறுக்கே வந்த பஸ்ஸின் முன் தள்ளியமை அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியது.

அந்தச் சந்தர்ப்பத்தில் பஸ்ஸின் ஓட்டுநர் ஆலிவர் சால்ப்ரிஸ், சாதுர்யமாகப் பஸ்ஸை அடுத்த வழித்தடத்துக்குத் திருப்பியதால் அந்தப் பெண் பெரும் ஆபத்திலிருந்து தப்பினார். “நான் பஸ்ஸைத் திருப்பியிருக்காவிட்டால், அவரது தலையில் பலத்த அடிபட்டிருக்கும்” என்று ஓட்டுநர் பின்னர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நடந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபர் மீண்டும் அதே பாலத்தில் வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் அவரிடம் பேச முயன்றும் அவர் அதை அலட்சியப்படுத்திவிட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய மெட்ரோபாலிட்டன் பொலிஸார், அனைத்து விசாரணை வழிகளும் முடிந்துவிட்டதாகக் கூறி 2018இல் இந்த வழக்கை முடித்து வைத்தனர். முன்னதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் மீதும் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை 44 வயது நபரொருவரட, மேற்படி பலத்த உடல் காயம் ஏற்படுத்த முயன்ற (attempted grievous bodily harm) சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.