செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் முதல்வர் விஜயை சந்தித்த சமந்தாவின் உணர்ச்சிபூர்வமான பதிவு: சமூக ஊடகங்களில் கவனம் பெற்றது!

முதல்வர் விஜயை சந்தித்த சமந்தாவின் உணர்ச்சிபூர்வமான பதிவு: சமூக ஊடகங்களில் கவனம் பெற்றது!

1 minutes read

சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யை, நடிகை சமந்தா நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மாத்திரமின்றி சமூக ஊடகங்களில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

விஜயுடன் இணைந்து கத்தி, தெறி மற்றும் மெர்சல் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள சமந்தா, அவர் அரசியல் துறையில் பயணத்தை ஆரம்பித்த பின்னர் நேரில் சந்தித்தமை இதுவே முதல் முறை ஆகும்.

சந்திப்பைத் தொடர்ந்து, தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, அதனுடன் உணர்ச்சிபூர்வமான கருத்துகளையும் நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், சென்னைக்கு வந்தபோது மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர்ந்ததாகவும், விஜய் ஒரு திரை ஹீரோவைத் தாண்டி தனித்துவமான ஆளுமை கொண்டவர் என்ற எண்ணம் தமக்குப் பல காலமாக இருந்ததாகவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விஜயின் ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் மத்தியில் அவருக்குக் கிடைக்கும் ஆதரவு ஆகியவை, அவர் வாழ்க்கையில் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்வார் என்ற நம்பிக்கையை தமக்குள் ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது துறையில் உச்சத்தை அடைந்த பிறகு, அனைத்தையும் விட்டு விட்டு புதிய சவால்கள் நிறைந்த துறையான அரசியலுக்குள் வருவதற்கு மிகுந்த துணிச்சல் தேவை என்றும், மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த முடிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.