சிம்பாப்வே நாட்டில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் புலாவாயோ நகரில் இன்று ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்மர்சன் நான்காவா உரையாற்றினார். அவரது உரையை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
எம்மர்சன் நான்காவா அவர்களின் உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிய போது எம்மர்சன் நான்காவாவை நோக்கி வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது.
வெடிகுண்டு ஜனாதிபதி மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக அளித்து சென்றார்கள். எம்மர்சன் நான்காவாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த குண்டு தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் தலைநகர் ஹராரேவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
