செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மலேசியா: ‘சட்டவிரோத குடியேறிகளை’ கண்டறிய நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல வெளிநாட்டுப் பெண்கள் கைது!

மலேசியா: ‘சட்டவிரோத குடியேறிகளை’ கண்டறிய நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல வெளிநாட்டுப் பெண்கள் கைது!

1 minutes read

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் குடிவரவுத்துறையால்  நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், முறையான ஆவணங்களின்றி Jalan Datoh பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த 13 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல், Batang Padang மற்றும் Kampar ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஆண்கள், பெண்கள் உள்பட 35 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமான முறையில், அங்கிருந்த விடுதிகளில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகின்றது.

“இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் தாய்லாந்து, வியாட்நாம், வங்கதேசம், மியான்மார், இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார் குடிவரவுத்துறை இயக்குனர் கமாலுதின் இஸ்மாயில்.

முறையான ஆவணங்களின்றி மலேசியாவுக்குள் நுழைந்தது, விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தது, சட்டவிரோதமாக பணியாற்ற விசாவை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர்களிடம் மலேசிய குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும்.

அதே சமயம், இவர்களுடன் இவர்களுக்கு வேலை வழங்கியதாக கருதப்படும் மூன்று மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.