
சீனாவில் தீவிரமாக ஒரு வைரஸ் நோய் பரவிவருகின்றது , உறுதியாக 41 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. தற்போது எந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கை 1,700 வரை இருக்கலாம் என பிரித்தானிய நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அறிவியலில் முன்பு அறியப்படாத வைரஸ் வகையொன்று வேகமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு ஆய்வாளர்கள் திணறிவருகின்றனர்.அத்தோடு, உலகின் பல்வேறு நாடுகள் இந்த மர்ம வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது. இதுவரை இதனால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வுஹான் நகரில் இந்த வைரஸ் பரவியதை தொடர்ந்து, தாய்லாந்தில் இருவரும், ஜப்பானில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரியவந்தது.
இது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவது போல தெரியவில்லை. வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.