செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மராட்டி இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து!

மராட்டி இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து!

0 minutes read

மராட்டிய மாநிலம்- ரத்னகி, தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில், இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமெனவும் அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரசாயன தொழிற்சாலையில் வழமைப்போல இன்றும் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிப் புரிந்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது, தொழிற்சாலையிலுள்ள பாய்லர் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.