செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்!

மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்!

1 minutes read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள மேகதாது என்ற இடத்தில், 9000 கோடி ரூபாய் மதிப்பில் கர்நாடக அரசு புதிய அணையை கட்ட முடிவெடுத்து இருந்தது.

மேலும், அந்த இடத்தில் ஆய்வு செய்து ஒன்றிய அரசிடம் விரிவான திட்ட அறிக்கையை அளித்துள்ளது.

இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரில் சிக்கல் ஏற்படுவதுடன், உபரி நீர் கிடைக்காமல் போகும் என்பதால் தமிழ்நாடு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் மேகதாதுவில் திட்டமிட்டபடி அணை கட்டப்படும் என்றும் அரசின் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொண்டு 100 வீதம் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவோம் எனவும் கர்நாடக முதல்வர் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “மேகதாது அணை கட்டுவது அதில் இருந்து நீர் பெறுவது தமிழ்நாட்டின் கையில் இல்லை.

அதனால் அவர்கள் எது பேசினாலும் அதற்கு அர்த்தம் இல்லை. நம்முடைய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.