March 24, 2023 3:40 am

இந்தியாவில் கொரோனா பற்றிய முழு விபரம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 85 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்து 963 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26 ஆயிரத்து 579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 இலட்சத்து 20 ஆயிரத்து 057 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் 2 இலட்சத்து 14 ஆயிரத்து 900 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்