இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி கிராமத்தில், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அங்கிருந்த திறந்தவெளி போர்வெல் கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு வந்த தேசிய மீட்பு படைக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளதுடன், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.