பாலியல் வன்கொடுமை இந்த உலகின் தரித்திரங்களில் ஒன்று. அப்படி ஒரு சம்பவம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற நிலையில் வன்கொடுமைக்கு உள்ளன 5 வயது சிறுமியின் இறுதி சடங்கு நேற்றைய தினம் கீழ்மாடு கிராமப் பஞ்சாயத்து பொது மயானத்தில் நடைபெற்றது. முன்னதாக, தைக்காட்டுக்கரா பள்ளியில் சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது பீகாரில் இருந்து வந்து கேரளாவில் குடும்பத்துடன் தொழில் செய்து வந்த நபரின் மகளே இந்த சிறுமி ஆவார் அவரை அசாஃபக் அலாம் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளமை தெரியவந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.