செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மிருசுவில் சடல விசாரணையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் கைது .

மிருசுவில் சடல விசாரணையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் கைது .

1 minutes read

மிருசுவில் படித்தமகளிர் திட்டம் பகுதியில் கோவில்களில் தொண்டு செய்து கொண்டு தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் நேற்று  காலை மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வீதிக்கு சமீபமாக சடலமாக  மீட்கப்பட்டார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் . ஆனால் பொலிசார் தீவிர விசாரணை செய்து ,கொலை செய்தவர் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்தினம் குகேந்திரன் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் அவரது சடலத்தில் காணப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றை கண்டறிந்தனர். அந்த வீட்டில் வசித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

“நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்த அவர் என்னை வன்புணர்வதற்கு முயற்சித்தார். அதனால் என்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கினேன். அவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று வீதியில் போட்டேன்” என்று அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபரைத் தாக்கிய கம்பியை தண்ணீரால் கழுவி வைத்ததுடன், வீட்டையும் கழுவி சந்தேகநபர் சுத்தப்படுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.