புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1 minutes read

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்ற பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அடைந்த வெற்றிகளும் எனும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மையத்தின் நிழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிதத் நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய நிகழ்வில் பெண்களை் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றில் அனைத்தையும் உடனடியாக செய்ய முடியாது.

ஆனால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சமூகமட்ட அமைப்புக்கள்,

பொலிசாரினுடைய ஒத்துழைப்பு எமக்கு தேவையாக இருக்கின்றது. அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதில் லரும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஆயினும் சமூக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சமூக மட்டஅமைப்புக்களும் அக்கறையுடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

காணி, கல்வி, வீடமைப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை குறிப்பிடடுள்ளீர்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று வீடு உள்ளிட்ட விடயங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தியே வழங்கப்படுகின்றது. காணி தொடர்பான பிரச்சினைகளிற்கு தற்போது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றதான கொள்கை சுற்று நிருபத்தின் ஊடாக பல்வேறு காணிகளிற்கான பிரச்சினை தீர்வுக்கு வரும் என நம்புகின்றோம். காணி முரண்பாடுகள், அனுமதிப்பத்திரங்கள் இல்லாதவர்களிற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளோருக்கான சந்தை வாய்ப்புக்கள் இல்லை எனவும், குறிப்பாக பனை உற்பத்தி கொருட்களை வேறு இடங்களிலிருந்து குறைந்த விலையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பிலும்

இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் பனை உற்பத்தி தொடர்பான விடயங்களிற்கு பனை அபிவிருத்தி சபை உள்ளது. அதேவேளை கூட்டுறவு சங்கங்களும் காணப்படுகின்றன. அவர்களுடன் இணைந்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நுண்கடன் பிரச்சினை தொடர்பிலும் இங்கு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இவ்விடயம் தொடர்பில் அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்டு இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றார். நுண்நிதி கடன்களிலிலே ஈடுபட்டவர்கள்,

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக கடன்களை பெறுவதற்கு தேவையோடு இருப்பவர்கள் போன்றவர்களை இவ்வாறான நிறுவனங்களிற்குள் தள்ளாமல் அவர்களுடைய தேவைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இவ்விதமாக நுண்நிதி கடன்களிலே சிக்குண்டவர்களை வெளியேற்றுவதற்கேற்ற வகையிலே கூட்டுறவு சங்கங்கள் ஊடாக குறைந்த வட்டியில் கடன் பெற்று சுயதொழிலில் முன்னேறிச் செல்வதற்கு ஏற்ற விதத்திலே முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.