செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழுவில் இருவர் கைது!

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழுவில் இருவர் கைது!

1 minutes read

வவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது.

காதல் விவகாரம் காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டது.

இதனிடையே, தாக்குதல் நடத்திய குழு யணித்த வாகன இலக்கம் பொலிஸாருக்கு உடனயடியாகத் தெரியப்படுத்தப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஊடாகவும் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

எனினும், இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களில் பொலிஸாரினால் எவ்வித கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மீண்டும் பொலிஸாரிடம் இதுகுறித்து வலியுறுத்தினார்.

இந்நிலையில், விசேட பொலிஸ் குழு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக திலீபன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா – திருநாவற்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.