செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; அரசு அனுமதிக்க வேண்டும்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; அரசு அனுமதிக்க வேண்டும்!

0 minutes read

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் தமிழ் மக்கள் தங்கள் இறந்து போன உறவுகளை நினைவு கூர அரசாங்கம் சந்தர்ப்பமளிக்க வேண்டும். அரசாங்கம் அதனை தவிர்த்து விட முயன்று வருகிறது. ஆனால் அது தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்கின்ற மிகப் பெரிய அநியாயமான செயலாகும்.

கடந்த காலங்களில் 2016 இலிருந்து தமிழர்கள் இந்த வணக்கத்தை முள்ளிவாய்க்காலில் சென்று உணர்வுபூர்வமாக மேற்கொண்டனர். அதே போன்று நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.