உடனடியாக தமிழக மீனவர்களின் விடுதலை கோரும் முதலமைச்சர்

தொடர்ச்சியாக எல்லையை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர்பில் அவர்களின் விடுதலை கோரி மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இன்றைய தினம் 15 மீனவர்கள்நெடுந்தீவுக்கு அருகில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களது விசைப்படகுகளும் கைப்பற்ற பட்ட நிலையில் இந்த கடிதம் முதலமைச்சரினால் எழுதப்பட்டுள்ளது.

தொடர்ச்சசியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது வலைகளும் கடற்படையினரால் சேதப்படுத்தப்படுவதுடன் சில சமயங்களில் அவர்களது மீன்களை பறிமுதல் செய்துகொண்டு அவர்களை விரட்டியடிப்பதாகவும் மீனவர்கள் தமது தொழிலை செய்ய பெரிதும் இது தடையாக உள்ளதால் இவற்றை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டுவந்தததை அடுத்து

23 மீனவர்களையும் 5 விசை படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் ஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் மேலும் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப்படகை மீட்க நடவடிக்கை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

ஆசிரியர்