செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விரைவில் தீர்வு காண வேண்டும்! – மஹிந்தவிடம் சம்பந்தன் வலியுறுத்து

விரைவில் தீர்வு காண வேண்டும்! – மஹிந்தவிடம் சம்பந்தன் வலியுறுத்து

0 minutes read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்துக்கு இன்று சென்று அவரது நலம் விசாரித்தார்.

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதி மற்றும் அரசுடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த, சம்பந்தனுக்கு உறுதியளித்தார்.

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க விரைவில் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கலந்துகொள்ளும் என்றும், அதன் பின்னர் அந்தக் கோரிக்கைகளை தனது கட்சி நேர்மறையான முறையில் ஆய்வு செய்யும் என்றும் மஹிந்த கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.