0
இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மதியம் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.