செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காலியில் காதலன் கொலை: காதலி கைது!

காலியில் காதலன் கொலை: காதலி கைது!

0 minutes read

காலி மாவட்டம், அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளைஞரை மிதிகமவுக்கு அழைத்த குறித்த பெண், அவரைக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே காதல் தொடர்பு காணப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மஹரகம பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபரான பெண் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

24 வயதான இளைஞர் கடந்த 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.