செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அடுத்த யாழ். மேயர் யார்? – இன்று ஆராய்கின்றது தமிழ் அரசு

அடுத்த யாழ். மேயர் யார்? – இன்று ஆராய்கின்றது தமிழ் அரசு

0 minutes read

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரை மேயர் வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கூட்டம் இன்று யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

அந்தக் கட்சியின் சார்பில் மேயராக இருந்த இ.ஆர்னோல்ட்டின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு அவர் பதவி விலகியுள்ளார். புதிய தெரிவு 10ஆம் திகதி நடைபெறும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் சார்பில் சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மாநகர சபை உறுப்பினர்களும் கட்சி உயர் மட்டத்தில் ஒரு சிலரும் விரும்புகின்றனர். ஆனால், கட்சி உயர் மட்டத்திலுள்ள ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தநிலையில் இன்றைய தினம் யாரை மேயர் பதவிக்கு நிறுத்துவது என்று இறுதி முடிவெடுக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.