செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை படையினருக்குக் காணி வழங்கமாட்டோம்! – கல்வி அமைச்சு திட்டவட்டம்

படையினருக்குக் காணி வழங்கமாட்டோம்! – கல்வி அமைச்சு திட்டவட்டம்

0 minutes read

“யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் சிங்கள மகா வித்தியாலயத்துக்குரிய காணி இராணுவத்தினருக்கு வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஒருபோதும் இணங்கவில்லை. நீண்டகால கல்வி நடவடிக்கைகளுக்கே அதனைப் பயன்படுத்தவுள்ளோம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“சிங்கள மகா வித்தியாலயக் காணி இராணுவத்தினருக்குக் கையளிக்கப்படவுள்ளது என்று வெளியான செய்தி தவறானது.

குறித்த காணி தமக்குத் தேவை என்று படைத்தரப்பு எமது மாகாணகி கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அந்தப் பாடசாலை தற்போது பாவனையில் இல்லை என்ற பதில் மாத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பாடசாலைக் காணியை இராணுவத்தினருக்கு கையளிப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதற்கு நீண்ட நடைமுறை காணப்படுகின்றது.

படைத்தரப்புக்கு அந்தக் காணியை வழங்கும் சிந்தனை எம்மிடம் துளியும் இல்லை. நீண்டகால நோக்கில் கற்றல் நடவடிக்கைக்கே அதனைப் பயன்படுத்தவே விரும்புகின்றோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.