புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கெஹலியவுக்கு 29 வரை விளக்கமறியல் நீடிப்பு!

கெஹலியவுக்கு 29 வரை விளக்கமறியல் நீடிப்பு!

0 minutes read

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட 6 பேருக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.

இந்தநிலையில், கடந்த 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரைக் கைது செய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.