மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி கடந்த (03.10.2025) சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வு நூலகர் திருமதி சசிகலா ரவீந்திரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
பொது நூலகத்தில் ஏற்கனவே உள்ள புத்தகங்களுடன் சேர்த்து, பல புதிய தலைப்புகளில் புத்தகங்களும் இணைக்கப்பட்டு இக்கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.



நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ், செல்வாநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை முதல்வர் மகேந்திரன் சேர் பிரதேச சபை சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும் பார்வையற்றவர்கள் கற்கக்கூடிய சிறப்பு புத்தகங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சி நாளையும் தொடர்வதோடு, அனைத்து தரப்பினரும் வருகைதந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இடம்: கரைச்சி பிரதேச சபை பொது நூலகம்

