செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் | முதல்வர் மு.க. ஸ்டாலின்

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் | முதல்வர் மு.க. ஸ்டாலின்

0 minutes read

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24) தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சர்கள் பதிலுரை வழங்கினர்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதன்போது,

இலங்கைத் தமிழர்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கு வந்துகொண்டுள்ள செய்திகளை அறிந்தேன். இது தொடர்பாக மத்திய அரசை தொடர்புகொண்டு இதை எப்படி கையாள வேண்டும் என சட்டரீதியாக கேட்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அவர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும்

என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.