செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹட்டன்-டிக்கோயா போடைஸ் பகுதியில் 50 குடும்பங்கள் பாதிப்பு!

ஹட்டன்-டிக்கோயா போடைஸ் பகுதியில் 50 குடும்பங்கள் பாதிப்பு!

1 minutes read

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நீர் வடிந்து சென்றதன் பின்னர், அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்று மாலை நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நேற்று இரவு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.