செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யுவதியை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த குழு!

யுவதியை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த குழு!

1 minutes read

யாழ்ப்பாணம்- ஆனைக்கோட்டை வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியை வழிமறித்த இனந்தெரியாத குழுவொன்று, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆனைக்கோட்டை 3ஆம் கட்டையடியை சேர்ந்த (24 வயது) குறித்த யுவதி, யாழ்.நகரிலுள்ள இரும்பகம் ( ஹாட்வெயார்) ஒன்றில் பணிபுரிகிறார்.

இவர் நேற்றும் (வெள்ளிக்கிழமை) வழமைப்போன்று பணிப்புரிந்து விட்டு மாலை 6.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஊடாக வீட்டுக்கு சென்ற வேளையில், ஆனைக்கோட்டையில் வழிமறிந்த சந்தேகநபர்கள் மூவர், அவருடன் முரண்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து யுவதியை தாக்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றப்போது, அவர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலிருந்து கைவிட்டு விட்டு, அருகிலிருந்த வீட்டிற்குள் பாதுகாப்பு தேடி ஓடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த குழு, மோட்டார் சைக்கிளுக்கு தீ மூட்டி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.

இதன்பின்னர் அயலவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர். ஆனாலும் மோட்டார் சைக்கிளில் பகுதிகளவில் எரிந்து நாசமாகிவிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த அவர்கள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.