செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி!

முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி!

0 minutes read

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண இதனை தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நடத்தும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலிலுக்கும்போதே இவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அடையாளம் கண்டுள்ளதாக கூறினார்.

மேலும் முன்னணி சுகாதார ஊழியர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்றும் அபாயத்தில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அரசுமருத்துவ அதிகாரிகள் சங்கம் தங்கள் உறவினர்களுக்கு மீதமுள்ள அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்கியதாகக் கூறி பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.