செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இது எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி!

இது எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி!

1 minutes read

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பரவல் தொடர்பாக ஒன்பது முறை நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

எட்டு முறை இடம்பெற்ற உரையாடலில் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி கூறுவது மாயாஜால வித்தை போலிருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறையால் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போடுவதற்கான காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்கவே இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவித்திருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.