செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் திரில்லர் கதையில் நயன்தாரா!

மீண்டும் திரில்லர் கதையில் நயன்தாரா!

1 minutes read

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.

அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நி்லையில் நடிகை நயன்தாரா, தற்போது சைலன்டாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் கதை மிகவும் பிடித்துப் போனதால் உடனே நடித்துக் கொடுத்து வருகிறாராம் நயன்தாரா.

குறுகிய கால தயாரிப்பாக இப்படம் தயாராகி வருகிறதாம். யோஹன் இசையமைக்கும் இப்படத்திற்கு தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை நயன்தாரா, இதற்கு முன் மாயா, ஐரா, டோரா போன்ற திரில்லர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.