செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகை

கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகை

0 minutes read

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகை இன்று (21)இலங்கையை வந்தடைந்தது.

35,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று (21) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் உடன்படிக்கைக்கு அமைய, 500 மில்லியன் டொலர் பெறுமதியான குறித்த டீசல் தொகை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகையாகும்.

குறித்த டீசல் தொகையை தரையிறக்கும் பணி இன்று (21) காலை முதல் முன்னெடுக்கப்படுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை ஆகியவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ள நிலையில், கொலன்னாவை எண்ணெய் களஞ்சியத்து கொண்டு சென்று அங்கிருந்து, துரிதமாக விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.