செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்

யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்

0 minutes read

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள நீலியாமோட்டை கிராமத்தில் யானைகளின்அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 68 குடும்பங்கள் வசிக்கும் இக் கிராமத்தை சூழ காட்டுப்பகுதியாக காணப்படுவதனால் யானைகள் மற்றும்; காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் உட்பட கூலி வேலைக்கு செல்பவர்களும் யானைகளினால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை, மின்சார வசதிகள் பூரணப்படுத்தப்படாமையால் இப்பகுதியில் இரவு வேளையில் வரும் யானைகளை அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும் அவ்வேளையில் வீட்டில் உள்ள பயிர்களையும் விவசாய நிலங்களும் யானைகள் நாசம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையினால் பெண்ணொருவரை யானை தாக்கியுள்ளதாகவும் தொவிக்கின்றனர். எனவே தமது கிராமத்தை சூழ மின்சார வேலிகளை அமைத்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

unnamed (2)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.