புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போராட்டக்காரர்கள், பிரதமரின் இல்லம் நோக்கி

போராட்டக்காரர்கள், பிரதமரின் இல்லம் நோக்கி

0 minutes read

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி அலரி மாளிகைக்கு அருகில், No Deal Gama-இல் உள்ள போராட்டக்காரர்கள், பிரதமரின் இல்லத்திற்கு இன்று செல்ல முயற்சித்தனர்.

எனினும், பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அலரி மாளிகைக்கு அருகிலுள்ள No Deal Gama போராட்டக்களத்தில் இருந்து இன்று ​(26) முற்பகல் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.

பேரணி கொழும்பு பிளவர் வீதியை சென்றடைந்தபோது, பொலிஸார் இடைமறித்தனர்.

இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர் அந்தக் குழுவினர் மற்றொரு வழியாக பிரதமரின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்குள் செல்ல முயன்றனர்.

அங்கும் பொலிஸார் அவர்களை தடுத்ததுடன், நீதிமன்ற உத்தரவை அறிவித்தனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.