செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பாகற்காய் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா

பாகற்காய் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா

1 minutes read

கல்லீரலை சுத்தப்படத்தவும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தவும், இரத்தம் விருத்தியாகவும், கெட்ட கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பாகற்க்காய் பெரிதும் பயன்படுகிறது.
பாகற்காயில் குழம்பு, கூட்டு, பொரியல், வறுவல், சிப்ஸ், பக்கோடா போன்று பலவகையாக செய்து சாப்பிடலாம். அனால் பாகற்காய் வைத்து ஒரு சுவையான ஆரோக்கியமான டீ தயாரிக்க முடியும் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் உடலில் நிகழும்.

பாகற்காய் டீ:
பாகற்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் பொது பாகற்காயின் சாறு தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த சாறினை வடிகட்டி எடுத்தால் உடலுக்கு நன்மை தரும் பாகற்க்காய் டீ தயார்.

இந்த பாகற்காய் டீயில் கசப்பு தெரியாமல் இருக்க சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். அனால் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்த்து கொள்ள கூடாது. அப்படியே குடிக்க வேண்டும். இந்த டீயை தொடர்ந்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீங்கி விடும். சர்க்கரையின் அளவு சீராகும். இந்த டீ எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு இயற்கை பானமாகும். அதிக நேரம் எடுக்காமல் உடனடியாக தயாரிக்கக் கூடிய ஒரு டீயாகும். கசப்புத் தன்மையை பற்றி நினைக்காமல் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்து விடலாம்.

நன்றி | Tamilcnn

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.