செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தாத்தாவின் கனவுகள் | பா.உதயன்

தாத்தாவின் கனவுகள் | பா.உதயன்

0 minutes read

தை பிறந்தால்
வழி பிறக்கும் என்று
தாத்தா இந்த
முறையும் சொன்னார்

என்னதை நினைத்து
சொன்னாரோ தெரியாது
இனப்பிரச்சினையை
நினைத்தாரோ தெரியாது

பல தையும் போய்
பாவம் தாத்தா
பார்த்திருந்தார்
பல தடவை

காணியும் போலீசும் வரும்
என்று காத்திருந்தார்
கன காலம்

திரும்பவும் யாரோ
தீர்வு பற்றி கதைத்ததால்
தீபாவளிக்குள் தீர்வு
வரும் என்று
காத்திருந்தார்

இந்தத் தடவையும்
இன்னும் ஒரு முறை
சொல்கிறார் தாத்தா
பல தடவை இந்தியா 13 ஐ
கொடுங்கள் என்றது போல்
தை பிறந்த கையோட
வழி பிறகும் என்கிறார்

பாவம் தாத்தா
போவதற்கும் முன்
தமிழனுக்கு ஏதேன்
கிடைப்பதை
பார்த்து விட்டு
போக நினைக்கிறார்

அது போக இப்போ
இனப்பிரச்சினையை இன்னும்
ஒரு மூன்று மாதத்தில்
தீர்ப்பேன் என்கிறார்
இப்போ வந்த அதிபர் ஒருவர்
அவ்வளவு சுலபம் என்று நினைத்தார் போல்
அத்தனை இனவாதிகளையும்
அருகில் வைத்துக் கொண்டு

எத்தனை ஒப்பத்தங்கள்
எத்தனை பரிந்துரைகள்
எத்தனை ஆலோசனைகள்
எத்தனை கமிசங்கள்
எல்லாம் கிழித்து எறிந்தபின்
இன்னும் ஒரு முறை
இதையும் தாத்தா நம்புகிறார்
பாவம் தாத்தா
நம்பிக்கையோடு இருக்கிறார்

ஆனால் அவர்களோ
இருட்டுக்குள் கறுப்புப் பூனையை
தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று
ஈழ மக்கள் தலைவன் ஒருவன்
சொல்லி இருந்த கதை போல்.

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.