செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கொரோனா அவசர நிலைக்கு முற்றுப்புள்ளி

கொரோனா அவசர நிலைக்கு முற்றுப்புள்ளி

0 minutes read

கொரோனா உலக நாடுகளின் பொருளாதாரம் சுகாதாரம் என்று அனைத்தையும் புரட்டி போட்ட சமயத்தில் இப்போது அவசர நிலைக்கு   முற்று புள்ளி என்ற அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு  அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு கூட்டத்திற்கு பின், இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், கொரோனா பாதிப்புகளிலிருந்து உலகம் முற்றிலும் விடுபட வில்லை என்றும், உலகளவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த வாரம் கூட மூன்று நிமிடங்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறினார்.

வைரஸின் இறப்பு விகிதம் ஜனவரி 2021-இல் வாரத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகம் என்ற உச்சத்தில் இருந்து ஏப்ரல் 24 அன்று 3 ஆயிரத்து 500 க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வால் 70 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.