காசா மோதல் தொடர்பில் இஸ்ரேலின் கவனம் முழுவதும் போராளிகளை சுட்டு கொல்வதிலேயே உள்ளது.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விசனம்.
மேலும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்திடம் 6 ஆயிரம் ரொக்கெட் குண்டுகளும், ஹமாஸ் அமைப்பிடம் அதைவிட நான்கு மடங்குரொக்கெட்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹனெக்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் பாலஸ்தீனத்திற்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை விட, காசா போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் இஸ்ரேல் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் காசாவில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் மையங்களின் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தின. இது தொடர்பான வீடியோவையும் சாச்சி ஹனெக்பி வெளியிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னையில் சமரசம் செய்ய எகிப்து முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.