செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த தம்பதி! – மனைவி மரணம்

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த தம்பதி! – மனைவி மரணம்

0 minutes read
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி இ.போ.ச. பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து பயணித்த தம்பதியினர் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சீதுவை, அம்பலன்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – சிலாபம் வீதியில் தன்டுகம விமானப் படை வீதித் தடைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் காயமடைந்த ஆண் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.