தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக கடந்தாண்டு டிசெம்பர் மாதம் அறிவித்தார். அதனால் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே, தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய வாக்களிப்பு நிலவரத்துக்கமைய, தென்கொரியாவின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லீ ஜே மியுங் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.