செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

0 minutes read

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில்  இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது.

இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் 1985 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் முகாம் ஒன்று இயங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.