செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல்; 7,000 பேருக்கு தொற்று!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல்; 7,000 பேருக்கு தொற்று!

1 minutes read

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 7,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இங்திய மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 306 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மீண்டும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, புதுடெல்லி முதல் அமைச்சர் ரேகா குப்தா, 7 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று (11) மாலை பிரதமர் மோடியை புதுடெல்லியில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால் முதலமைச்சர் உட்பட அனைவருக்கும் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் விருந்து வைக்கவுள்ளார். இதனால் டெல்லி மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பிரதமர் மோடியின் வீட்டிற்கு செல்வர்.

எனினும், பிரதமர் மோடியை சந்திக்க செல்லும் அனைவருக்கும் PCR கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியை பார்க்க வரும் அனைவருக்கும் PCR பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயம் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.