செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனைவியுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழப்பு!

மனைவியுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழப்பு!

0 minutes read

புத்தளம் – வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12) இரவு 09.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  77 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தனது மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  இது தொடர்பில் வென்னப்புவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.