செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு; இருவர் பலி!

அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு; இருவர் பலி!

0 minutes read

அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடுச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா – ஐடஹோ, கூட்டனாய் மாவட்டத்தில் சிறிய காட்டுத்தீ மூண்டுள்ளது.

அதனைத் தீயணைப்பு வீரர்கள் அணைத்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கு வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இதில் தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தபர். தப்பியோடிய சந்தேகநபர் இதுவரைக் கைதுசெய்யப்பட்டவில்லை.

சம்பவ இடத்துக்கு அருகே செல்வதைத் தவிர்க்கும்படி பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடுச் சம்பவத்திற்கு ஐடஹோவின் ஆளுநர் திரு பிராட் லிட்டில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.